'ஜேம்ஸ் பாண்ட்' வேடத்தில் நடித்து புகழ்பெற்ற நாயகன் ரோஜர் மூர் மரணம்!
பிரபல உளவாளி கதாபாத்திரமான 'ஜேம்ஸ் பாண்ட்' வேடத்தில் நடித்து புகழ்பெற்ற திரைப்பட நாயகன் சர் ரோஜர்மூர் ...


கலிபோர்னியா: பிரபல உளவாளி கதாபாத்திரமான 'ஜேம்ஸ் பாண்ட்' வேடத்தில் நடித்து புகழ்பெற்ற திரைப்பட நாயகன் சர் ரோஜர்மூர் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
உலகமெங்கும் திரைப்பட ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த உளவாளி கதாபாத்திரமான 'ஜேம்ஸ் பாண்ட்' வேடத்தில் நடித்து புகழ்பெற்றவர் சர் ரோஜர்மூர். இவர் கடந்த 1973 ஆம் ஆண்டு முதல் 1985ஆம் ஆண்டு வரை தொடர்ந்து ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்து உலகப் புகழ் பெற்றார். இந்த காலக்கட்டத்தில் அவர் 7 திரைப்படங்களில் ஜேம்ஸ் பாண்டாக நடித்தார்.
படங்களில் நடிப்பதை நிறுத்திய பின்பு சுவிட்ஸர்லாந்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ரோஜர் மூர் புற்றுநோய் காரணமாக இன்று மாலை உயிரிழந்தார். இந்த தகவலானது அவரின் குடும்பத்தினர் முலமாக டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...