காடலோனியா பிரிவினைவாத தலைவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்
ஸ்பெயினின் காடலோனியா மாகாணத்தை தனி நாடாக அறிவித்து தீர்மானம் நிறைவேற்றிய தலைவர்கள் அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜராகினர்.


ஸ்பெயினின் காடலோனியா மாகாணத்தை தனி நாடாக அறிவித்து தீர்மானம் நிறைவேற்றிய தலைவர்கள் அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜராகினர்.
பிரிவினைவாதத் தீர்மானம் நிறைவேற்றியதைத் தொடர்ந்து மாகாண அரசு அண்மையில் கலைக்கப்பட்டது. மாகாண அரசில் இடம்பெற்ற அமைச்சர்கள் மீது சதி மற்றும் தேச துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையில் 8 முன்னாள் அமைச்சர்கள் ஆஜராகினர். இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு வாதாடியது.
மாகாணத்தின் முன்னாள் முதல்வர் கார்லஸ் புஜ்தமோன்ட் உள்ளிட்ட மேலும் 5 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டபோதிலும், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. புஜ்தமோன்ட் தற்போது பெல்ஜியமில் உள்ளார். அரசியல் அகதியாக அவர் அங்கு தஞ்சமடையத் திட்டமிட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது. தேச துரோக வழக்கில் அடுத்த விசாரணை நவ. 9-ஆம் தேதி நடைபெறும் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...