47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஈராக்கில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்: 330 பேர் பலி! 

ஈராக் நாட்டில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் 330 பேர் பலியாகினர். காயமடைந்தவர்கள் எண்ணிக்கையானது  5 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

News image
Updated On :13 நவம்பர் 2017, 10:18 am

DIN

பாக்தாத்: ஈராக் நாட்டில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் 330 பேர் பலியாகினர். காயமடைந்தவர்கள் எண்ணிக்கையானது  5 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஈராக் தலைநகர் பாக்தாத்திலிருந்து, ஈரான் - ஈராக் எல்லை பகுதியில் 350 கி.மீ. தூரத்தில் உள்ள ஹலாப்ஜா நகரத்தில் நேற்று நள்ளிரவு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 -ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் மத்திய தரைக்கடலோரப் பகுதி வரை மேற்கு நோக்கி இருந்தது. துருக்கி, சிரியா, குவைத், ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம், ஆர்மேனியா, அஜர்பைஜான் மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஈரானின் மேற்கு ஹெர்மன்ஷா மாகாணத்தில் அதிக அளவில் சேதம் ஏற்பட்டு  உள்ளது.

இடிபாடுகளில் சிக்கி இதுவரை 330  பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 5 ஆயிரத்துக்கும்  மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.