ஹெச்1-பி விசா விதிகளைக் கடுமையாக்கும் வரைவு மசோதா: அமெரிக்க நாடாளுமன்ற நிலைக்குழு ஒப்புதல்
அமெரிக்காவில் வெளிநாட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்காக வழங்கப்படும் ஹெச்1-பி நுழைவு இசைவு (விசா) விதிமுறைகளைக் கடுமையாக்கும் வரைவு மசோதாவை


அமெரிக்காவில் வெளிநாட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்காக வழங்கப்படும் ஹெச்1-பி நுழைவு இசைவு (விசா) விதிமுறைகளைக் கடுமையாக்கும் வரைவு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய, அந்த நாட்டின் நீதித் துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிலைக்குழு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளைப் பாதுகாத்திடவும், மேம்படுத்துவதற்குமான 'ஹெச்ஆர் 170' என்ற சட்ட மசோதாவை நீதித் துறைக்கான நிலைக் குழுவிடம், நீதிமன்றம், அறிவுசார் சொத்துரிமை மற்றும் இணையதள விவகாரங்களுக்கான நாடாளுமன்ற துணைக் குழுவின் தலைவர் டாரெல் இஸ்ஸா புதன்கிழமை தாக்கல் செய்தார். அந்த மசோதாவைப் பரிசீலித்த நிலைக் குழு, அதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஒப்புதல் வழங்கியது.
அந்த மசோதாவில், ஹெச்1-பி விசா மூலம் வெளிநாட்டுப் பணியாளர்களை நியமிக்கும் நிறுவனங்கள், ஒவ்வொரு பணியாளர்களுக்கும் குறைந்தபட்சமாக அளிக்க வேண்டிய சம்பளத்தை தற்போதுள்ள 60,000 டாலரிலிருந்து (இந்திய மதிப்பில் ரூ.39 லட்சம்) 90,000 டாலராக (சுமார் ரூ.58.7 லட்சம்) உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்கப் பணியாளர்களை நீக்கிவிட்டு, அந்த இடங்களில் ஹெச்1-பி விசா முறையைப் பயன்படுத்தி வெளிநாட்டுப் பணியாளர்களை நியமிப்பதையும் புதிய வரைவுச் சட்டம் தடை செய்கிறது. ஹெச்1-பி விசா பணியாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் குறித்த விவகாரத்தில் அமெரிக்க அரசியல் கட்சிகளிடையே மிகப் பெரிய கருத்து வேறுபாடு நிலவுவதால், இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறுவது கடினமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறினாலும், அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்த மசோதாவில் கையெழுத்தால் மட்டுமே அது சட்டமாக்கப்படும்.
நாஸ்காம் கவலை: இதற்கிடையே, இந்த வரைவு மசோதா குறித்து இந்தியத் தககவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் சங்கமான நாஸ்காம் கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ஆர். சந்திரசேகர் கூறுகையில், 'அமெரிக்கா நாடாளுமன்ற நிலைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 'ஹெச்ஆர் 170' மசோதா சட்டமாக்கப்பட்டால், அது அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், நிறுவனங்களின் நடவடிக்கைகளில் அரசின் கெடுபிடிகள் அதிகரிக்கும்' என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...