ஈராக்கில் தீவிரவாதிகள் தொடர் தாக்குதல்: 60 பேர் பலி!
ஈராக்கில் இன்று ஐஎஸ் தீவிரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களில் 60 பேர் பலியாகினர்.


பாக்தாத்: ஈராக்கில் இன்று ஐஎஸ் தீவிரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களில் 60 பேர் பலியாகினர்.
இந்த சம்பவங்கள் குறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது:
ஈராக்கின் தென்பகுதியில் அமைந்துள்ள நசிரியாஹ் பகுதியில் உள்ள உணவு விடுதி ஒன்றில் இன்று காலை நுழைந்த தீவிரவாதிகள் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் கண்மூடித்தனமாகச் சுட்டனர்.
பின்னர் உடனடியாக அங்கிருந்து வெளியேறியவர்கள் அருகில் இருந்த சோதனைச் சாவடி ஒன்றில் தங்கள் காரிலிருந்த குண்டை வெடிக்கச் செய்தனர்.
தீவிரவாதிகளின் இந்த தொடர் தாக்குதல் சம்பவங்களின் காரணமாக 60 பேர் பலியாகினர். மேலும் பலர் படு காயமடைந்தனர்.
இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது இந்த சம்பவங்களுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. ஐஎஸ் அமைப்பின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...