முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

அமேசானிடம் விலை போகவிருக்கிறதா ப்ளிப்கார்ட்? இணைய வர்த்தகத்தில் நம்பர் 1 யார்? 

ஆன்லைனில் ஒரு பொருளை வாங்குவதற்கு பயந்த காலம் மலையேறி தற்போது பல ஆஃபர்களை அள்ளிக் குவிக்கும் ஆன்லைன் விர்த்தகம் சூடு பிடித்துள்ளது.

News image
Updated On :5 ஏப்ரல் 2018, 12:10 pm IST


ஆன்லைனில் ஒரு பொருளை வாங்குவதற்கு பயந்த காலம் மலையேறி தற்போது பல ஆஃபர்களை அள்ளிக் குவிக்கும் ஆன்லைன் விர்த்தகம் சூடு பிடித்துள்ளது. உலகம் முழுக்க மக்கள் நேரமின்மை காரணமாகவும், பணத்தை மிச்சப்படுத்தவும் ஆன்லைன் வர்த்தகத்தை நாடுகின்றனர். பசிக்கு பீட்சா ஆர்டர் செய்வதிலிருந்து, செல்ஃபோன் வரை, ஆடை அணிகலன்களிலிருந்து டூத் பேஸ்ட் வரை சர்வமும் இணையத்தில் கிடைக்கும் டிஜிட்டல் உலகமிது. இந்நிலையில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஜெயண்ட் என்று சொல்லப்படும் பலமிக்க நிறுவனங்களுள், கூகுள் ஆல்ஃபபெட், அமேசான், ஃப்ளிப்கார்ட், ஈபே, அலிபாபா, ஊபர், ஃபேஸ்புக், ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமேசான் நிறுவனம் (Amazon Inc), ஆன்லைன் வர்த்தகத்தில் தனி முத்திரை பதிக்க சில புதிய முடிவுகளை எடுத்துள்ளது. அமேசான் நிறுவனர் ஜெஸ் பெஸோஸ் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் ப்ளிப்கார்ட்டை சக போட்டியாளரான அமேசான் (Amazon Inc) நிறுவனம் வாங்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. காரணம் இந்தியாவில் அமேசானுக்குப் போட்டியாக இருப்பது ப்ளிப்கார்ட் நிறுவனம்தான். 

சீனாவை தவிர பெரும்பாலான இடங்களில் தங்கள் கிளையை தொடங்கி உள்ள அமேசான், உலகம் முழுக்க இணைய வர்த்தகத்தில் முதல் அல்லது இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவிலுள்ள ப்ளிப்கார்ட் மற்றும் சீனாவின் அலிபாபா ஆகிய நிறுவனங்கள் இணையத்தில் மிகப் பிரபலமாக உள்ளதால், அமேசானால் இந்தியாவிலும் சீனாவிலும் மற்ற இடங்களைப் போல முதன்மையாக இருக்க இயலவில்லை. ப்ளிப்கார்ட்டை வாங்குவதினால் இந்த போட்டியை வென்றெடுக்கலாம் என்று அமேசான் திட்டமிட்டுள்ளது.

Story image

பெங்களூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ப்ளிப்கார்டின் இலக்கு இந்திய வர்த்தகம் மட்டுமே. இதன் நிறுவனர்கள் சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்ஸால் ஆகியோர். 2007-ம் ஆண்டு சிறிய அளவில் தொடங்கிய இந்த நிறுவனம், அமேசானுக்கே சவால் விடும் அளவுக்கு வளர்ந்ததன் காரணம் ப்ளிப்கார்ட்டில் கிடைக்கும் பொருட்கள் ஒவ்வொறு ரகமும் அமேசானில் கிடைக்கக் கூடியவை. மேலும் சலுகை விலை அறிவிப்பிலும், குறித்த நேரத்தில் பொருட்களை அனுப்பி வைப்பதிலும் ப்ளிப்கார்ட் அமேசானுக்கு இணையாக செயல்பட்டு தனி முத்திரை பதித்து வருகிறது. மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக ப்ளிப்கார்ட் இருந்து வருவதும் அதன் வெற்றிக்கு முக்கிய காரணம்.

தற்போது ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 60 சதவிகிதத்திற்கும் மேலான பங்குகளை வாங்கி அந்நிறுவனத்தை முடக்க அமேசான் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இதற்கு முன்னால் ப்ளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் வாங்க முடிவு செய்து, அதன் 40 சதவிகித பங்குகளை தங்களுக்கு விற்குமாறு ப்ளிப்கார்ட்டிடம் கேட்டுள்ளது. போலவே அமேசானும் தற்போது களமிறங்கி இருப்பதால், இணைய வர்த்தக உலகில் இச்செய்தி பரபரப்பாகியுள்ளது.

அமேசானுக்கும் வால்மார்ட்டுக்கும் ஒப்புக் கொடுத்துவிட்டு ப்ளப்கார்ட் கடையை சாத்துகிறதா அல்லது போட்டிகளை சமாளித்து தனித்துவத்துடன் இணைய வர்த்தகத்தில் எல்லைகளை விரிவுபடுத்தப் போகிறதா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.