
லண்டன்: இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து 8.7 கோடி பேரின் பேரின் தகவல்கள் பேஸ்புக் வழியாக கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திற்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்தில் இருந்து செயல்படும் 'கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா' என்னும் அரசியல் தகவல் ஆய்வு நிறுவனம், முறைகேடாக பேஸ்புக் நிறுவனத்திடமிருந்து பயனாளர்களின் தகவல்களைப் பெற்று, அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் மனதில் மாற்றத்தை உண்டாக்கியாது தெரிய வந்தது. இதன்மூலம் தேர்தலில் முடிவுகள் மாற பெரிதும் துணை புரிந்ததும் நிகழ்ந்தது.
அமெரிக்கா மட்டுமின்றி ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகளிலும் நடைபெற்ற தேர்தல்களில் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் முறைகேடுகளில் ஈடுபட்டது தெரிய வந்தது. அத்துடன் இந்தியாவிலும் சில தேர்தல்களில் அனலிட்டிகா நிறுவனத்தின் பங்களிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் பூதகரமானதும் தவறுகள் நடந்துள்ளதை ஒப்புக் கொண்ட பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில் பேஸ்புக் வழியாக மொத்தமாக 8.7 கோடி பேரின் பேரின் தகவல்கள் பேஸ்புக் வழியாக கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திற்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் தொழிற்பிரிவினைச் சேர்ந்த மூத்த அதிகாரி மைக் ஷ்ரோப்பர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மொத்தம் 8.7 கோடி மக்களின் தனிப்பட்ட தகவல்கள் முறையற்ற வகையில் பகிரப்பட்டு இருக்க வாய்ப்புள்ளது. இவர்களில் பெரும்பாலும் அமெரிக்க மக்களின் தகவல்களே பகிரப்பட்டுள்ளன. இரண்டாவதாக இங்கிலாந்தில் இருந்து 11 லட்சம் பயனாளர்களின் தகவல்கள் பகிரப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.