47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிரியாவில் குண்டு வெடிப்பில் கட்டடம் இடிந்து 31 பேர் பலி! 

சிரியாவில் இஸ்லாமிய போராளிக் குழுக்கள் ஆக்கிரமிப்பில் உள்ள இட்லிப் நகரத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில், கட்டடம் இடிந்து 31 பேர் பலியாகினர்.

News image
Updated On :10 ஏப்ரல் 2018, 12:33 pm

IANS

டமாஸ்கஸ்: சிரியாவில் இஸ்லாமிய போராளிக் குழுக்கள் ஆக்கிரமிப்பில் உள்ள இட்லிப் நகரத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில், கட்டடம் இடிந்து 31 பேர் பலியாகினர்.

சிரியாவில் அதிபர் அல் பஷாருக்கு  எதிராக ஆயுதம் ஏந்திய போராளிக் குழுக்கள் போராடி வருகின்றன. அப்படி போராடி வரும் இஸ்லாமிய போராளிக் குழுக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது இட்லிப் நகரம். அங்கு செவ்வாயன்று பெரும் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பின் காரணமாக அருகிலிருந்த கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 31 பேர் பலியாகினர். இவர்களில் 22 பேர் பொதுமக்கள்; மீதமுள்ள 9 பேர் ராணுவத்தினைச் சேர்ந்தவர்கள்.

'சிரியா சிவில் டிபன்ஸ்' என்னும் தன்னார்வ அமைப்பு இடிபாடுகளிலிருந்து பலியானோரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த தகவல்களை சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.