உலகின் மிக வயதான சிலந்திப் பூச்சி: ஆஸ்திரேலியாவில் மரணம் 

உலகின் மிக ‘வயதான சிலந்திப் பூச்சி என்றுஅறியப்பட்ட வைல்டு டிராப்டோர் வகை சிலந்தியானது தனது 43-ஆம் வயதில், ஆஸ்திரேலியாவில் ஆய்வகம் ஒன்றில் மரணமடைந்துள்ளது
உலகின் மிக வயதான சிலந்திப் பூச்சி: ஆஸ்திரேலியாவில் மரணம் 
Published on
Updated on
1 min read

கான்பெரா: உலகின் மிக ‘வயதான சிலந்திப் பூச்சி என்றுஅறியப்பட்ட வைல்டு டிராப்டோர் வகை சிலந்தியானது தனது 43-ஆம் வயதில், ஆஸ்திரேலியாவில் ஆய்வகம் ஒன்றில் மரணமடைந்துள்ளது

இது குறித்து ஆஸ்திரேலியாவின் கர்டின் பல்கலைக்கழக பூச்சியியல் துறையின் பேராசிரியர் லிண்டா மாஸன் செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறியதாவது:

கடந்த 1974-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மேற்குப்பகுதியில் உள்ள வீட்பெல்ட் பகுதியில் இருந்து இந்த சிலந்திப்பூச்சியை கண்டுபிடித்தோம். இதைக் ஆய்வாளர் பார்பாரா கொண்டுவந்து ஆய்வகத்தில் பாதுகாத்து, சிலந்திப்பூச்சிகளின் நடவடிக்கைகளை ஆய்வு செய்து வந்தார். இது காடுகளில் வாழக்கூடிய வைல்டு டிராப்டோர் வகையாகும். ஆய்வகத்தில் இதற்கு 'நம்பர்-16' என்று பெயரிடப்பட்டது.

இவ்வகை சிலந்திப்பூச்சி ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான இடங்களிலும், பூங்காக்களிலும், வளர்ந்த மரங்களிலும் காணமுடியும். இந்த வகை சிலந்திப்பூச்சிகளின் பொதுவான குணநலன்கள், நடவடிக்கைகள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக 'நம்பர்-16' என்று பெயரிடப்பட்ட இந்த சிலந்திப்பூச்சி பயன்படுத்தப்பட்டது.

எங்களுக்குத் தெரிந்தவரை நம்பர்-16 என்று பெயரிடப்பட்ட சிலந்திப்பூச்சிதான் உலகிலேயே பதிவு செய்யப்பட்டத்தில் மிகவும் வயதான சிலந்திப்பூச்சியாக இருக்க வாய்ப்புள்ளது.

திடீரென்று ஏற்பட்ட ஒருவிதமான ஒவ்வாமை நோய் காரணமாக இந்த சிலந்திப்பூச்சி இறந்தது. வழக்கமாக ட்ராப்டோர் வகையான சிலந்திகள் 5 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை மட்டும் உயிர்வாழும் தன்மை கொண்டது. நாங்கள் ஆய்வகத்தில் வைத்துப் பராமரித்ததால், 43 ஆண்டுகள் வரை உயிர்வாழ்ந்தது

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்பு மெக்சிகோ நாட்டில் 28 வயதான டிரான்டுலா எனும் சிலந்திப்பூச்சியே நீண்டநாட்கள் உயிரோடு வாழ்ந்தது என்ற சாதனையை படைத்திருந்தது. அதை 'நம்பர்16' என்று பெயரிடப்பட்ட இந்த சிலந்திப்பூச்சி முறியடித்து விட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com