பாகிஸ்தானில் லாரி மீது பேருந்து மோதி விபத்து: 20 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்றின் மீது லாரி மோதிய விபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர்.


பெஷாவர்: பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்றின் மீது லாரி மோதிய விபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள புனெர் நகரில் இருந்து கராச்சி நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தானது கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள கோஹத் மாவட்டத்தின் சமரி பகுதி அருகே வந்தபொழுது, லாரி ஒன்றின் மீது நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 2 பேர் பெண்கள். 2 பேர் சிறுவர்கள் உட்பட 20 பேர் பலியாகினர். மேலும் 35 பயணிகள் படுகாயமடைந்து உள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு பணியாளர்கள் உடனடியாக காயமடைந்தவர்களை மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...