நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

பாகிஸ்தானில் லாரி மீது பேருந்து மோதி விபத்து: 20 பேர் உயிரிழப்பு 

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்றின் மீது லாரி மோதிய விபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:25 pm

DIN

பெஷாவர்: பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்றின் மீது லாரி மோதிய விபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள புனெர் நகரில் இருந்து கராச்சி நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தானது கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள கோஹத் மாவட்டத்தின்  சமரி பகுதி அருகே வந்தபொழுது, லாரி ஒன்றின் மீது நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 2 பேர் பெண்கள்.  2 பேர் சிறுவர்கள் உட்பட 20 பேர் பலியாகினர். மேலும் 35 பயணிகள் படுகாயமடைந்து உள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு பணியாளர்கள் உடனடியாக காயமடைந்தவர்களை மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.