விசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

தடைகளை ஏற்க முடியாது'

பிரிட்டனில் நடைபெற்ற நச்சுத் தாக்குதல் விவகாரத்தோடு தொடர்புபடுத்தி, அமெரிக்கா தங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பதை ஏற்க முடியாது என்று ரஷியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST


பிரிட்டனில் நடைபெற்ற நச்சுத் தாக்குதல் விவகாரத்தோடு தொடர்புபடுத்தி, அமெரிக்கா தங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பதை ஏற்க முடியாது என்று ரஷியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷிய அதிபர் விளாதிமீர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் கூறியதாவது:
ஏற்கெனவே, எங்கள் மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகள் சட்டத்துக்குப் புறம்பானவை என்பது எங்கள் நிலைப்பாடு ஆகும்.
இந்த நிலையில், பிரிட்டன் நச்சுத் தாக்குதலை எங்களுடன் தொடர்புபடுத்தி, அதற்காக எங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக அமெரிக்கா கூறுவது, முற்றிலும் ஏற்புடையது அல்ல என்றார் அவர்.
முடிவல்ல.. ஆரம்பம்...!
1991-ஆம் ஆண்டின் ரசயான மற்றும் உயிரி ஆயுதப் போர் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் ரஷியாவுக்கு எதிராக அமெரிக்க அரசு அறிவித்துள்ள பொருளாதாரத் தடைகள், இரு நாடுகள் இடையிலான தூதரக உறவை முடக்குவதற்கான ஆரம்பமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிகின்றனர்.
இதுகுறித்து அரசியல் நிபுணர்களை மேற்கோள் காட்டி வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழ் தெரிவித்ததாவது:
நச்சுத் தாக்குதல் தொடர்பான பொருளாதாரத் தடை தடை விதிக்கப்பட்ட 90 நாள்களுக்குள் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்று ரஷியா வாக்குறுதி அளிக்க வேண்டும். மேலும், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா என்பது குறித்து சர்வதேச நிபுணர்கள் ஆய்வுகள் மேற்கொள்ளவும் அந்த நாடு அனுமதி அளிக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாவிட்டால், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகள் நிறுத்தப்படும்.
மேலும், ரஷிய விமானங்கள் அமெரிக்காவில் தரையிறங்குவதற்கான அனுமதியும் மறுக்கப்படும்.
இதன் காரணமாக, இருதரப்பு தூதரக உறவுகளும் முடங்கிவிடும் என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.