உலக தத்துவ காங்கிரஸ் மாநாடு திங்கள்கிழமை சீன தலைநகர் பெய்ஜிங்கில் தொடங்கியது.
உலக தத்துவ காங்கிரஸ் மாநாடு முதன்முதலில் 1900-ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்றது. உலகம் முழுவதிலும் மிகப்பெரிய தத்துவ நிகழ்வுகளில் ஒன்றாக இது திகழ்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்நிகழ்வு பெய்ஜிங்கில் நடப்பது இதுவே முதல் முறை.
இம்மாநாட்டில் "மனிதனாக கற்றுக் கொள்ளுதல்" என்ற பொருளிலில் சொற்பொழிவுகள், விரிவுரைகள் மற்றும் சுற்றுச்சூழல்கள் போன்ற 100-க்கும் அதிகமான கருத்தரங்குகள் நடைபெற உள்ளன. 121 நாடுகளிலும், பிராந்தியங்களிலிலுமிருந்து 6,000-க்கும் மேற்பட்ட தத்துவ மேதைகள் மற்றும் கல்வியாளர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிகழ்வில் பல்வேறு கலந்துரையாடல்கள் மூலம் தத்துவ எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதோடு, உலக நாகரிகம் மற்றும் எதிர்காலத்தில் மனிதர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசப்பட உள்ளது. மேலும் சீன தத்துவத்திற்கும் உலகின் பிற பாகங்களிலிருக்கும் தத்துவங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கும், ஒருமித்த கருத்தைத் தேடுவதற்கும், சீனாவிற்கும் மற்ற நாடுகளுக்கும் இடையிலான இடைவெளியை நீக்குவதற்கும் இந்த உலக தத்துவ காங்கிரஸ் மாநாடு - 2018 உதவும் என்று சீன அமைப்புக் குழுவின் தலைவர் லின் ஜியானுவா நம்பிக்கை தெரிவித்தார்.
தத்துவ சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பு மற்றும் பீக்கிங் பல்கலைக்கழகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வு இம்மாதம் 20-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வார பலன்கள் (ஏப். 24 - 30) - ரிஷபம்

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மேஷம்

என்ன, கரூர் சென்று செந்தில் பாலாஜி வாக்களிக்கவில்லையா? ஏன்??

வார பலன்கள் (ஏப். 24 - 30) மேஷம் - மீனம்! பதவி உயர்வு யாருக்கு?
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

