மாலி அதிபராக கெய்டா மீண்டும் தேர்வு
மாலியில் நடைபெற்ற அதிபர் தேர்தரில் தற்போதைய அதிபர் இப்ராஹிம் பூபக்கர் கெய்டா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு 67.17 வாக்குகளும், எதிர்த்துப் போட்டியிட்ட சோமைலா சிஸ்úஸவுக்கு 32.83 வாக்குகளும் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலி: பால விபத்தில் பலி 39-ஆக உயர்வு
இத்தாலியின் ஜெனோவா நகரில், கடந்த செவ்வாய்க்கிழமை சாலைப் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39-ஆக உயர்ந்தது. இந்த விபத்துக்கு, பாலத்தைப் பராமரித்து வந்த நிறுவனத்தின் மெத்தனமே காரணம் என்று அரசு குற்றம் சாட்டியுள்ளது.