ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக  ஸ்காட் மேரிசன் தேர்வு 

ஆஸ்திரேலியாவில் நிலவி வந்த அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் அந்நாட்டின் புதிய பிரதமராக  ஸ்காட் மேரிசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக  ஸ்காட் மேரிசன் தேர்வு 

கான்பெரா: ஆஸ்திரேலியாவில் நிலவி வந்த அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் அந்நாட்டின் புதிய பிரதமராக  ஸ்காட் மேரிசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமையிலான கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றான லிபரல் கட்சியின்  மால்கம் டர்ன்புல் அந்நாட்டின் பிரதமராகப் பதவி வகித்து வந்தார்.

அந்நாட்டின்   நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஆளும் கூட்டணி கட்சிகளின் செல்வாக்கு வெகுவாக சரிந்துள்ளதாகவும்,  எதிர்க்கட்சியாக இருக்கும் லேபர் கட்சியின் கை ஓங்கி வருவதாகவும் அங்கிருந்து கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், லிபரல் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு பிரதமர் மால்கம் டர்ன்புல் போட்டியிடுவது என்று தீர்மானித்தார். அவரை எதிர்த்து உள்துறை  அமைச்சரும்,  முன்னாள் உளவுத்துறை உயரதிகாரியுமான பீட்டர் டட்டன் களமிறங்கினார். 

நடைபெற்ற இந்த தேர்தலில் 48 வாக்குகளை பெற்று மால்கம் டர்ன்புல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்ததாக கடும் சர்ச்சை எழுந்தது. எனவே இரண்டாவது முறையாக வாக்கெடுப்பு நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. அதற்கு ஏதுவாக, கட்சிக் கூட்டத்தை கூட்டிய மால்கம்  டர்ன்புலிடம்,  அவருக்கு ஆதரவு இல்லை என்றும், தலைமையை மாற்ற வேண்டும் என்றும் கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் வழங்கப்பட்டது.

அதனை ஏற்றுக் கொண்ட மால்கம்  டர்ன்புல் பதவி விலகினார். அதனையடுத்து ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக ஸ்காட் மேரிசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம், ஆளும் கன்சர்வேட்டி கூட்டணி ஆட்சிக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு ஏற்பட்டுள்ளது.

கன்சர்வேட்டி கூட்டணி அரசாங்கத்தின் பதவிக்காலம் வரும் 2019 மே 19 ஆம் தேதி வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com