இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

ஏலத்துக்கு வருகிறது மகாத்மா எழுதிய கடிதம்

காதியின் மகத்துவத்தை வலியுறுத்தி ராட்டை என்ற பெயரில் மகாத்மா காந்தி எழுதிய தேதி குறிப்பிடாத கடிதத்தை அமெரிக்க இணையதளம் வாயிலாக ஏலம் விட திட்டமிடப்பட்டுள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

பாஸ்டன்: காதியின் மகத்துவத்தை வலியுறுத்தி ராட்டை என்ற பெயரில் மகாத்மா காந்தி எழுதிய தேதி குறிப்பிடாத கடிதத்தை அமெரிக்க இணையதளம் வாயிலாக ஏலம் விட திட்டமிடப்பட்டுள்ளது. அக்கடிதம் 5 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.3.5 லட்சம்) ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. 
இதுகுறித்து ஏல இல்லம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:  
''பாபுவின் ஆசீர்வாதங்கள்'' என்ற தலைப்பில் யஷ்வந்த் பிரசாத் என்பவருக்கு குஜராத்தி மொழியில் காந்தி தனது கையெழுத்துடன் கூடிய கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் ''ராட்டை மூலம் கிடைக்கும் பொருளாதார சுதந்திரம் மிக முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார். 
அதிலும், சுதந்திர இயக்கத்தை ஊக்குவிக்க வேண்டுமானால் நம்முடைய பொருளாதார நிலையை மேம்படுத்த கைத்தறி ஆடைகளையே நெய்து உடுத்த வேண்டும். கைத்தறிக்கு வழங்கப்படும் ஆதரவே நாட்டின் சுதந்திர போராட்டத்திற்கு வழங்கப்படும் ஆதரவாக கருதப்படும். எனவே கைத்தறித்தொழிலை சார்ந்தே மற்றவை அமைந்துள்ளதாக  நீங்கள் (யஷ்வந்த் பிரசாத்) கூறியதே சரி'' என்று குறிப்பிட்டுள்ளார். 
மேலும்,  இந்தியர்கள் அனைவரும் காதி ஆடைகளை அணிய வேண்டும் என்பதும், ஆங்கிலேயர்களின் துணிகளுக்கு பதிலாக சுதேசி இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதும் காந்தியடிகளின் முக்கிய நோக்கமாக இருந்ததால் இந்த கருத்துக்களை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த கடித ஏலம் வரும் செப்டம்பர் 12ம் தேதி இணையதளம் வாயிலாக அமெரிக்காவை தலைமையகமாக  கொண்ட ஆர்.ஆர் ஏலம் அமைப்பு மூலம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.