வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஜப்பானின் ஹோன்சூ தீவில் நிலநடுக்கம்

ஜப்பானின் ஹோன்சூ தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகி உள்ளது. 

News image
Updated On :24 டிசம்பர் 2018, 4:44 am

DIN


டோக்கியோ: ஜப்பானின் ஹோன்சூ தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகி உள்ளது. 

ஜப்பானின் ஹொன்சூ தீவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 அலகுகளாகப் பதிவானது. 

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஹொன்சூ தீவு பகுதியில் உள்ள நகர பகுதிகளில் நன்கு உணரப்பட்டது. இதையடுத்து, அந்நகர குடியிருப்பு வாசிகள் அனைவரும் பாதுகாப்பான இடங்களை நோக்கி பயந்து ஓடினர். 

இந்த நிலநடுக்கத்தில் சேதம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. 

இந்தோனேஷியாவில் நேற்று ஏற்பட்ட சுனாமியில் 222 பேர் இறந்த நிலையில் ஜப்பானில் நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.