ஜப்பானில் ஹான்ஸு தீவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவு!
பசிபிக் பெருங்கடல் தீவு நாடான ஜப்பானில் உள்ள ஹான்ஸு தீவில் புதனன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.


டோக்கியோ: பசிபிக் பெருங்கடல் தீவு நாடான ஜப்பானில் உள்ள ஹான்ஸு தீவில் புதனன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
பசிபிக் பெருங்கடல் பகுதியிலமைந்துள்ள தீவு நாடு ஜப்பான். இங்கு நூற்றுக்கணக்கான தீவுக் கூட்டங்கள் உள்ளன. இவற்றில் ஒன்று ஹான்ஸு. உள்ளூர் நேரப்படி இன்று காலை 10:51 மணியளவில், ஹான்ஸு தீவில் இருந்து வடகிழக்கு திசையில் சுமார் 103 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் சுமார் 64 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுக்கோலில் 6.4 அளவாகப் பதிவானது. இதனால் உண்டான சேதங்களைப் பற்றி தகவல் எதுவும் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...