தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஆப்கானிஸ்தான் ராணுவ பயிற்சி மையத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 11 ராணுவ வீரர்கள் பலி!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ பயிற்சி மையம் ஒன்றில் திங்கள் அதிகாலை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

News image
Updated On :29 ஜனவரி 2018, 12:34 pm

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ பயிற்சி மையம் ஒன்றில் திங்கள் அதிகாலை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ராணுவ பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் திங்களன்று அதிகாலை  ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் 'திடீர்' தாக்குதலை நடத்தினர்.  இந்த தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலில் காயம் அடைந்த 16 வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தாக்குதல் நடத்திய ஐந்து பயங்கரவாதிகளில் நால்வர் கொல்லப்பட்டனர். ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளதாக பின்னர் தகவல்கள் வெளியாகியுள்ளது 

இந்த தகவல்களை ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளரை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.