மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 100-க்கும் மேற்பட்ட சிறுமிகள் விடுவிப்பு

நைஜீரியாவில் போகோ ஹாராம் எனும் பயங்கரவாத அமைப்பால் கடத்தப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பள்ளிச் சிறுமிகள் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :22 மார்ச் 2018, 11:11 am

நைஜீரியாவில் போகோ ஹாராம் எனும் பயங்கரவாத அமைப்பால் கடத்தப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பள்ளிச் சிறுமிகள் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நைஜீரியாவில் அமைந்துள்ள பள்ளியில் இருந்து கடந்த 2014-ஆம் ஆண்டு 300-க்கும் மேற்பட்ட சிறுமிகள் காணாமல் போனார்கள். பின்னர் இவர்களை கடத்தியதாக போகோ ஹாராம் எனும் பயங்கரவாத அமைப்பு அறிவித்தது.

இது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன்பின்னர் நடத்தப்பட்ட பலதரப்பு பேச்சுவார்த்தைகளை அடுத்து  பலர் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் 100-க்கும் மேற்பட்ட பள்ளிச் சிறுமிகள் அந்த பயங்கரவாத அமைப்பின் பிடியில் வைக்கப்பட்டனர். அவர்கள் குறித்த தகவல்கள் இதுவரை தெரியவில்லை.

இந்த பயங்கரவாத அமைப்பு அங்கு கடந்த 2009-ம் ஆண்டு முதல் நைஜீரிய அரசாங்கத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. சில சமயங்களில் தற்கொலைப்படை தாக்குதல்களிலும் ஈடுபடும். இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2 மில்லியன் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். 

இந்நிலையில், இதே பயங்கரவாத அமைப்பு பிப்ரவரி 19-ந் தேதி நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் இருந்து 104 மாணவிகளைக் கடத்தியது. தற்போது இவர்கள் அத்தனை பேரும் புதன்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.