இஸ்லாமாபாத்: அமெரிக்க விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காக்கன் அப்பாஸி வழக்கமான பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட விவகாரம் அந்நாட்டிற்கு அவமானத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தால் பிரதமர் நவாஸ் ஷெரீப் தகுதியிழப்பு செய்யப்பட்ட பின், ஆகஸ்ட் 1 அன்று நாட்டின் 18-வது பிரதமராக ஷாஹித் காக்கன் அப்பாஸி பதவியேற்று கொண்டார்
அவர் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள நோய்வாய்ப்பட்ட தனது சகோதரியை சந்திக்க தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டுள்ளார். எபொழுது நியூயார்க்கில் உள்ள ஜே.எஃப்.கே. சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விமான நிலையத்தில் அவர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இது தொடர்பான காட்சிகளை பாகிஸ்தானின் ஜியோ தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. அந்த காட்சிகளில் அப்பாஸி பாதுகாப்பு சோதனைகளை முடித்துக் கொண்டு, தனது பை மற்றும் கோட் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு நடந்து வெளியேறும் காட்சி இடம் பெற்று உள்ளது.
ஆனாலும் அவர் தானாகவே பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றினார் என்று ஜியோ நியூஸ் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மது, சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: ஜிவி பிரகாஷ்
ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையையும் களமிறக்கி பாஜக பிரசாரம் செய்தும் பலனளிக்காது! - மமதா
கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்!

போதிய பேருந்து வசதி இல்லை! 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க முடியவில்லை! - Nirmal Kumar | TVK
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


