இலங்கையில் ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பிக்கள் இருவர் கைது 

பிரதமர் ராஜபட்சவின் ஆதரவாளரைத் தாக்கிய வழக்கில் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பிக்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
இலங்கையில் ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பிக்கள் இருவர் கைது 
Published on
Updated on
1 min read

கொழும்பு: பிரதமர் ராஜபட்சவின் ஆதரவாளரைத் தாக்கிய வழக்கில் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பிக்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இலங்கை அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றம் வரும் 14-ஆம் தேதி கூடுவதாக அதிபர் மைத்ரிபால சிறீசேனா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். இதுதொடர்பாக அவரது செயலர் உதயா ஆர். சேனேவிரத்னே மூலமாக அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. 

முன்னதாக, இலங்கை நாடாளுமன்றத்தை வரும் 16-ஆம் தேதி வரையில் முடக்கி சிறீசேனா உத்தரவிட்டிருந்தார். இச்சூழலில் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட அவருக்கு நெருக்கடி அதிகரித்து வந்த நிலையில், வரும் 7-ஆம் தேதி நாடாளுமன்றம் கூடுமென கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வரும் 14-ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் அதிபர் சிறீசேனாவால் பிரதமராகி அறிவிக்கப்பட்ட ராஜபட்சவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரதமரின் இல்லம் அமைந்துள்ள 'அலரி மாளிகையின்' வெளியே ஞாயிறு மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியின்  எம்.பிக்கள் ஹேசன்ன விதாங்க மற்றும் பவித தேவரபெரும இருவரும் கலந்து கொண்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து குரல் எழுப்பிய ராஜபட்சவின் ஆதரவாளர் பிரசன்னா என்பவரை எம்.பிக்கள் இருவரும் தாக்கியதாக புகார் கூறப்பட்டது. 

இந்நிலையில் பிரதமர் ராஜபட்சவின் ஆதரவாளரைத் தாக்கிய வழக்கில் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பிக்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அவர்கள் தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட உள்ளனர். 

மொத்தம் 225 எம்.பி.க்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 113 பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில் ராஜபட்சவின் அணியில் 100 பேர் மட்டுமே இருக்கின்றனர். பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை 103 எம்.பி.க்கள் ஆதரிக்கின்றனர். இச்சூழலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 16 பேர், இடதுசாரிகளின் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த (ஜேவிபி) 6 பேர் இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களாக உள்ளனர்.

ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி ஒருவர் மற்றும் ரணிலின் கட்சியைச் சேர்ந்த சிலரும் ராஜபட்சவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், கைது செய்யப்பட்ட எம்.பிக்கள் சிறையில் அடைக்கப்பட்டால்,  நமபிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்போது அது ரணிலுக்கு சிக்கலை உருவாக்கும்.      
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com