வாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடியது தொடர்பாக, அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட ட்வீட் சர்சையைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் என்பது முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் காலத்திலில் இருந்து பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையாகும். ஆனால் அமெரிக்காவில் கடந்த வாரம் நடைபெற்ற இடைக்காலத் தேர்தல்களின் காரணமாக, அப்போது தீபாவளி கொண்டாடப்படவில்லை.
பின்னர் செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் உள்ள ரூஸ்வெல்ட் அறையில், அமெரிக்காவில் உள்ள இந்தியா வம்சாவழியினருடன் அதிபர் ட்ரம்ப் தீபாவளி கொண்டாடினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றுடன் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டிருந்தார். அதுதான் தற்போது சர்சையைக் கிளப்பியுள்ளது. அந்த தகவல் பின்வருமாறு:
அமெரிக்கா முழுவதும் மற்றும் உலகமெல்லாம் உள்ள புத்த மதத்தினர், சீக்கியர்கள் மற்றும் ஜைனர்கள் ஆகியோரால் கொண்டாடப்படும் விடுமுறை தினமான தீபாவளியினை கொண்டாடுவதற்கு நாங்கள் இன்று கூடினோம். இந்நாளில் லட்சக்கணக்கானோர் தங்கள் குடும்பத்துடன் கூடி விளக்குகளை ஏற்றி புதுவருடத்தை வரவேற்கின்றனர்.
இவ்வாறு அவர்தெரிவித்திருந்தார்.
ட்ரம்பின் பதிவில் தீபாவளியினைக் கொண்டாடும் முக்கியமானதும் மற்றும் மிகப் பெரியதுமான மதக்குழுவான ஹிந்துக்களை குறிப்பிடாதது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது. பின்னர் பல்வேறு ட்விட்டர் பயனாளர்களும் அதனைச் சுட்டிக்காட்டியவுடன் ட்ரம்ப் தவறைத் திருத்திக் கொண்டு வேறு ஒரு பதிவினை புகைப்படத்துடன் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
15 ஆண்டுகள் திருடர்கள் ஆட்சி! ராமருக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள்! பாஜக தலைவர்

விசிக மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற திமுகவே காரணம்: தொல் திருமாவளவன் பேச்சு

உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
அறிமுக இயக்குநருடன் இணையும் ரவி மோகன்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


