இலங்கை நாடாளுமன்றத்தில் இரண்டாவது நாளாக ராஜபட்ச ஆதரவாளர்கள் அமளி 

இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் ராஜபட்சவின் ஆதரவு எம்.பி.க்கள் இடையே இரண்டாபவது நாளாக கைகலப்பு மற்றும் அமளி ஏற்பட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் இரண்டாவது நாளாக ராஜபட்ச ஆதரவாளர்கள் அமளி 
Published on
Updated on
1 min read

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் ராஜபட்சவின் ஆதரவு எம்.பி.க்கள் இடையே  இரண்டாபவது நாளாக கைகலப்பு மற்றும் அமளி ஏற்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை என்பது புதனன்று நிறைவேற்றப்பட்ட நமபிக்கை இல்லாதத் தீர்மானத்தால் நிரூபணமானது. அதனையடுத்து வியாழன் அன்று அவையே கூடிய நிலையில், சபாநாயகருக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜபட்ச ஆதரவு எம்பிக்கள் மறுத்து சபாநாயகர் கரு ஜெயசூர்யாவை சூழ்ந்து கொண்டு குரல் எழுப்பினர்.

நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்க முடியாது என்று ராஜபக்ச பேசியதை எதிர்த்து ரணில் விக்ரமசிங்கே ஆதரவாளர்கள் கண்டித்தனர்.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் கைகலப்பாக மாறியது. நிலைமையை கட்டுப்படுத்த முடியாததால், சபாநாயகர் கரு ஜெயசூர்யா அவையில் இருந்து வெளியேறினார்.   

இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் ராஜபட்சவின் ஆதரவு எம்.பி.க்கள் இடையே  இரண்டாபவது நாளாக கைகலப்பு மற்றும் அமளி ஏற்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க  உறுப்பினர்களின் பெயர்களை அழைத்து வாக்கெடுப்பை நடத்துமாறு சபாநாயகர், கட்சித் தலைவர்களுடன் வியாழன் அன்று  நடைபெற்ற சந்திப்பில் அதிபர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வெள்ளியன்று பிற்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடும்போது வாக்கெடுப்பு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றத்திற்கு சபாநாயகர் வருகை தந்து குரல் வாக்கெடுப்பினை தொடங்கினார். எனினும் ராஜபட்ச தரப்பு எம்பிக்கள்  சபாநாயகரின் இருக்கையை தூக்கிய நிலையில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இரு தரப்பு எம்பிக்களும் மோதிக்கொண்டனர்.

சபாநாயகர் மற்றும் காவலர்கள் மீது நாற்காலிகளை தூக்கியெறிந்து ராஜபட்ச தரப்பினர் ரகளையில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற காவலர்கள் மீதும் ராஜபட்ச தரப்பினர் தாக்குதல் நடத்தினர். 

அமளிகளுக்கு நடுவே 19-ஆம் தேதிக்கு நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதாக தெரிவித்து விட்டு  பாதுகாப்புடன் சபாநாயகர் ஜெயசூர்யா அங்கிருந்து வெளியேறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com