விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பத்திரிகையாளர் கொலை வழக்கில் இளவரசர் சல்மானை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை: சவுதி அமைச்சர் திட்டவட்டம்   

பத்திரிகையாளர் கசோக்கி கொலை வழக்கில் பட்ட இளவரசர் சல்மானை பதவி நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று சவுதி அமைச்சர் அடேல் அல்-ஜுபேர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :22 நவம்பர் 2018, 3:25 pm

ரியாத்: பத்திரிகையாளர் கசோக்கி கொலை வழக்கில் பட்ட இளவரசர் சல்மானை பதவி நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று சவுதி அமைச்சர் அடேல் அல்-ஜுபேர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் கொடூரக் கொலை விவகாரம்  உலகின் பல நாடுகளிலும் எதிர்ப்பு குரல்கள் மற்றும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் சவுதி பட்ட இளவரசர் சல்மானுக்கு தொடர்பு உள்ளது என்று குற்றம் சாட்டப்படுகிறது.   
 
அதன் காரணமாக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை நீக்க வேண்டும் என வலுவான கோரிக்கைகள் எழுந்து வருகிறது. 

இந்நிலையில் பத்திரிகையாளர் கசோக்கி கொலை வழக்கில் பட்ட இளவரசர் சல்மானை பதவி நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று சவுதி அமைச்சர் அடேல் அல்-ஜுபேர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து சவுதி அரேபிய வெளியுறவுத்துறை அமைச்சர்  அடேல் அல்-ஜுபேர் பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை  நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள்  அபாயகரமானவை. அப்படி நடப்பதற்கு சாத்தியமேயில்லை. துருக்கி தலைநகர் 
இஸ்தான்புல்லில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி நடந்த கசோக்கியின் கொலையில் சவுதி இளவரசருக்கு எந்த வித பங்கும் இல்லை. 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

முன்னதாக கசோக்கியின்  கொலையில் சல்மானுக்கு தொடர்பு உள்ளதா என்று விசாரிக்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றம் கோரிக்கை விடுத்ததற்கு மறுநாளே இத்தகைய மறுப்பு சவுதிஅமைசசர் ஒருவரிடம் இருந்து வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.