வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கிரீஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவு!

கிரீஸ் நாட்டின் உள்ள சுற்றுலா தீவில் அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 6.8 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

News image
கோப்புப்படம்
Updated On :26 அக்டோபர் 2018, 2:53 am

DIN


ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டின் உள்ள சுற்றுலா தீவில் அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 6.8 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

கிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவான ஜகிந்தோஸ் பகுதியில் இன்று அதிகாலை 4.25 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 என்ற அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் வெட்டவெளியாக உள்ள இடத்தில் தஞ்சமடைந்தனர்.

உயிர்ச் சேதமோ, பெரிய அளவிலான பொருள் சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.