சென்னையிலிருந்து விமானம் மூலம் கொழும்புவை தாக்கத் திட்டமிட்ட  விடுதலைப்புலிகள்: இலங்கை அதிபர் தகவல் 

கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னையிலிருந்து விமானம் மூலம் கொழும்புவை விடுதலைப்புலிகள்  தாக்கத் திட்டமிட்டிருந்ததாக  இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா தெரிவித்துள்ளார். 
சென்னையிலிருந்து விமானம் மூலம் கொழும்புவை தாக்கத் திட்டமிட்ட  விடுதலைப்புலிகள்: இலங்கை அதிபர் தகவல் 

நியூயார்க்: கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னையிலிருந்து விமானம் மூலம் கொழும்புவை விடுதலைப்புலிகள்  தாக்கத் திட்டமிட்டிருந்ததாக  இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா தெரிவித்துள்ளார். 

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே கடந்த 2009-ம் ஆண்டு இறுதிக்கட்டப் போர் நடந்தது. இறுதியில் விடுதலைப்புலிகள் ராணுவத்தால் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டனர். இந்த உள்நாட்டுப் போரில் இலங்கை ராணுவத்தின் தாக்குதலில் லட்சக்கணக்கான தமிழர்கள் குண்டுவீச்சில் கொல்லப்பட்டனர். 

இந்நிலையில் கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னையிலிருந்து விமானம் மூலம் கொழும்புவை விடுதலைப்புலிகள்  தாக்கத் திட்டமிட்டிருந்ததாக  இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா தெரிவித்துள்ளார். 

தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வரும் ஐ.நா.சபையின் பொது அவைக் கூட்டத்தில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

2009-ம் ஆண்டில் இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே இறுதிக்கட்டப் போர் உச்ச கட்டத்தில் இருந்தது. அப்போது விடுதலைப்புலிகளின் வான் தாக்குதலுக்கு அஞ்சி முன்னாள் அதிபர் ராஜபட்ச மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோர் எங்குச் சென்றார்கள் எனத் தெரியவில்லை. நாட்டுக்குப் பாதுகாப்புத்துறைக்கு என தனிச் செயலாளர் இல்லை என்பதால்  நான்தான் பாதுகாப்புத்துறையை கூடுதலாகக் கவனித்துவந்தேன்.

அதிலும் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதத்தின் கடைசி இரு வாரங்களில் விடுதலைப்புலிகளின் தாக்குதல் தீவிரமாக இருந்தது. அப்போது அவர்கள் அமைச்சர்களின் வீடுகளையும், அமைச்சர்களையும் குறிவைத்து தாக்க உள்ளனர் என்பதால் நாட்டில் உள்ள அனைத்துத் தலைவர்களையும் நாட்டை விட்டு வெளியே பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைத்தேன். இது இதுவரை யாருக்கும் வெளியில் தெரியாத ரகசியம்.

விடுதலைப்புலிகளில் தங்களது 'வான்புலிகள்' படை மூலம் கடந்த 2007-ம் ஆண்டு கொழும்பு விமான நிலையத்தைத் தாக்கி இருக்கிறார்கள். இந்த முறையும் தாக்குவார்கள் எனத் தெரியும். 
2009-ம் ஆண்டில் சென்னையில் இருந்தோ அல்லது வேறுஏதோ அருகிலுள்ள காட்டுப்பகுதியில் இருந்தோ விமானம் மூலம் கொழும்பு நகரை விடுதலைப்புலிகள் தாக்க திட்டமிட்டுள்ளார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

கொழும்பு நகரில் விடுதலைப்புலிகள் தாக்குவார்கள் என்பதால், நான் நகரைவிட்டு வெளியிடத்தில் இருந்து நிலவரங்களைக் கவனித்தேன். 

இவ்வாறு அதிபர் சிறீசேனா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com