வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியாவை சுனாமி தாக்கியது (விடியோ இணைப்பு) 

வெள்ளியன்று மாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியாவை தற்போது சுனாமி தாக்கியுள்ளது. 

News image
Updated On :28 செப்டம்பர் 2018, 2:05 pm

ஜகார்தா: வெள்ளியன்று மாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியாவை தற்போது சுனாமி தாக்கியுள்ளது. 

இந்தோனேசியாவின் மத்தியப் பகுதியான சுலவேசிப் பகுதியில் வெள்ளி மாலை உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.5 ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேப் பகுதியில் முன்னதாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவாகியிருந்தது. இதில் ஒருவர் பலியானார். 10 பேர் காயமடைந்தனர். 12க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

கடுமையான நிலநடுக்கம் தாக்கியுள்ளதை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை உடனடியாக விடுக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் மாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியாவை தற்போது சுனாமி தாக்கியுள்ளது. 

இந்தோனேசியாவின் மத்தியப் பகுதியான சுலவேசிப் பகுதியினைத் தாக்கியுள்ள இந்த சுனாமியினால் ஏற்ப்பட்ட உயிர்சேதம் குறித்து  உடனடியாகத் தகவல் இல்லை.  

விடியோ:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.