வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தீபாவளிக்கு வெடி வெடித்ததால் சிங்கப்பூரில் இந்தியருக்கு சிறை தண்டனை  

தீபாவளிக்கு வெடி வெடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிங்கப்பூரில் இந்திய வம்சாவழி இளைஞருக்கு மூன்று வாரங்கள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.  

News image
Updated On :12 ஏப்ரல் 2019, 10:08 am

IANS

சிங்கப்பூர்: தீபாவளிக்கு வெடி வெடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிங்கப்பூரில் இந்திய வம்சாவழி இளைஞருக்கு மூன்று வாரங்கள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.  

சிங்கப்பூரின் யிஷுன் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவன் அர்ஜுன் (29). இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவரான இவர் கடந்த ஆண்டு நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளியன்று, சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா தீபாவளி பஜார் பகுதியில் இருந்து  வாங்கி வந்த பட்டாசுகளை, அதிகாலை 3.30 மணியளவில் தனது குடியிருப்பு பகுதி அருகே வெடித்துள்ளார்.  சுமார் ஐந்து நிமிடங்களுக்கு வெடிச்சத்தம் நீடித்துள்ளது.

இதையடுத்து முறையான அனுமதி இன்றி பட்டாசுகளை வெடித்ததாகவும், அருகில் இருந்த குடியிருப்புவாசிகளுக்கு ஆபத்து விளைவித்ததாகவும், காவல்துறை அவர் மீது வழக்குப் அதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தது.   

இந்நிலையில் அந்த இளைஞருக்கு மூன்று வாரங்கள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.  

தீர்ப்பை வழங்கிய மாவட்ட நீதிபதி இந்த வெடி வெடித்தல் சம்பவமானது பலருக்கு காயங்களையும், தீப்பற்றும் அபாயத்தையும் உருவாக்க கூடியது என்று விமர்சித்துள்ளார்.எனவே இளைஞர் ஜீவன் அர்ஜுனுக்கு மூன்று வாரங்கள் சிறை தண்டனையும், 5000 சிங்கப்பூர் டாலர்கள் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.