தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க மூன்றாவது முறையாக லண்டன் நீதிமன்றம் மறுப்பு 

நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க மூன்றாவது முறையாக லண்டன் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

News image
Updated On :26 ஏப்ரல் 2019, 10:03 am

DIN

லண்டன்:   நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க மூன்றாவது முறையாக லண்டன் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோர் ரூ.13,000 கோடி அளவுக்கு கடன் மோசடியில் ஈடுபட்டது கடந்த ஆண்டு ஜனவரியில் தெரியவந்தது. ஆனால், அதற்கு முன்பே அவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிவிட்டனர். நீரவ் மோடியின் கடன் மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை உள்ளிட்டவை விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள அவர்களது பல்வேறு சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் நீரவ் மோடி சுதந்திரமாக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியானது. அதையடுத்து அமலாக்கத்துறை விடுத்த கோரிக்கையை ஏற்று, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம், நீரவ் மோடிக்கு எதிராக கைது ஆணை பிறப்பித்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட அவர், இப்போது லண்டனில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவரது 28 நாள் நீதிமன்றக் காவல் முடியவுள்ள நிலையில், அது தொடர்பான விசாரணை வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதில், காணொலிக்காட்சி வாயிலாக நீரவ் மோடி ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

இந்நிலையில் நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க மூன்றாவது முறையாக லண்டன் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் காணொலிக்காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட நீரவ் மோடி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அத்துடன் வழக்கு விசாரணை மே மாதம் 24-ஆம் தேதி நடைபெறும் என்றும் நீதிமன்றம் அறிவித்தது.

ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த 2 மனுக்களையும் நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.