அமெரிக்காவில் யூத வழிபாட்டுத்தலத்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள யூத வழிபாட்டுத்தலம் ஒன்றில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பெண் ஒருவர் பலியாகி உள்ளார்.
அமெரிக்காவில் யூத வழிபாட்டுத்தலத்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி
Published on
Updated on
1 min read

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள யூத வழிபாட்டுத்தலம் ஒன்றில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பெண் ஒருவர் பலியாகி உள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள போவே நகரில் யூத மத கோவில் ஒன்று அமைந்துள்ளது. இங்கு மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில், நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.  அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக உடனடியாக அருகில் ஊழல் பேலிமர் மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பெண் ஒருவர் உயிரிழந்து விட்டார்.  காயமடைந்தவர்களில் இளம்பெண் ஒருவரும் இரண்டு ஆண்களும் அடங்குவர். 

அதிர்ச்சியளிக்கும் இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டது ஜான் எர்னஸ்ட் (வயது 19) என்னும் வாலிபர் என்று தெரிய வந்துள்ளது. அவன் ஏ.ஆர். 15 ரக துப்பாக்கியை இதற்காக பயன்படுத்தி உள்ளான். அமெரிக்காவில் சமீபத்தில் நடந்துள்ள பல துப்பாக்கி சூடு சம்பவங்களில் இந்த ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது.

பின்னர் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் வாலிபன் எர்னஸ்ட் கைது செய்யப்பட்டுள்ளான். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com