'இந்தியாவுக்கு நோ சொல்லுங்க' - பாகிஸ்தானின் புதிய கோஷம்
காஷ்மீர் விவகாரத்திற்கு எதிர்வினையாக 'இந்தியாவுக்கு நோ சொல்லுங்க' என்னும் புதிய கோஷத்தை, கலாச்சார பரிவர்த்தனை தளத்தில் பாகிஸ்தான் முன்னிறுத்தி உள்ளது.


இஸ்லாமாபாத்: காஷ்மீர் விவகாரத்திற்கு எதிர்வினையாக 'இந்தியாவுக்கு நோ சொல்லுங்க' என்னும் புதிய கோஷத்தை, கலாச்சார பரிவர்த்தனை தளத்தில் பாகிஸ்தான் முன்னிறுத்தி உள்ளது.
அரசமைப்புச் சட்டப்பிரிவு 370-ன் வழியாக காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதுடன், அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்னும் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வழி செய்யும் மசோதாக்கள் மத்திய அரசால், மாநிலங்களவையில் கடந்த திங்களன்றும், மக்களவையில் செவ்வாயன்றும் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து இதற்கான அரசாணையும் உடனடியாக வெளியிடபப்ட்டது. இந்த செயலானது நமது அண்டைநாடான பாகிஸ்தானிலும் எதிர்வினைகளை உண்டாக்கியுள்ளது.
அதன் எதிரொலியாக பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதரை திருப்பி அனுப்ப பாகிஸ்தான் முடிவு செய்ததுடன், இந்தியாவுடனான வர்த்தக உறவைத் துண்டித்துக் கொள்வதாகவும் அறிவிப்பு வெளியிட்டது.
முன்னதாக இதே விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கான பொறுப்பு தூதராக உள்ள மூத்த அதிகாரியை பாகிஸ்தானுக்கு திரும்ப அழைப்பது என்று அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக கடந்த செவ்வாயன்று பாகிஸ்தான் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் இந்தித் திரைப்படங்களை பாகிஸ்தானில் திரையிடவும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்திற்கு எதிர்வினையாக 'இந்தியாவுக்கு நோ சொல்லுங்க' என்னும் புதிய கோஷத்தை, கலாச்சார பரிவர்த்தனை தளத்தில் பாகிஸ்தான் முன்னிறுத்தி உள்ளது.
இதுதொடர்பான தகவல் பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் 'டான்' செய்தித்தாளில் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் இதுதொடர்பாக பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தில், பிரதமர் இம்ரான்கானின் சிறப்பு உதவியாளரான பிர்தவ்ஸ் ஆஷிக் அவான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
இந்தியாவிலிருந்து எல்லா விதமான கலாச்சார ரீதியிலான தகவல் பரிமாற்றங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவிலிருந்து டி.டி.ஹெச் சாதன விற்பனையை கண்காணித்து, நடவடிக்கை எடுக்க, பாகிஸ்தான் மின்னணு ஊடக ஓழுங்குமுறை ஆணையத்திற்கு (பெம்ரா) உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து செய்யப்படும் கலாச்சார தகவல் பரிமாற்றங்கள் பாகிஸ்தான் இளைஞர்களின் மனதினை பாழ்படுத்தி விடும்.
இதுதொடர்பாக தொடர்புடைய அணைத்து அமைச்சரவைகளையும் உள்ளடக்கிய சிறப்பு குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்துத்துவ சிந்தனைகளை எல்லா தளத்திலும் தடுத்து நிறுத்திட இத்தகைய குழுவினை உருவாக்க வேண்டும் என்று, கடந்த வாரம் பிரதமர் தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்தியாவிலிருந்து நிகழ்த்தப்படும் கலாச்சார ஊடுருவலைத் தடுத்து நிறுத்த வேண்டியது பாகிஸ்தான் ஊடகங்களின் கடமையாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...