ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

பூடானில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுக்கு சனிக்கிழமை சென்றடைந்தார். 

News image
Updated On :17 ஆகஸ்ட் 2019, 8:33 am

DIN

பூடான் பிரதமரின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுக்கு சனிக்கிழமை சென்றடைந்தார். இதன்மூலம் பிரதமர் மோடி அந்நாட்டுக்குச் செல்வது இது இரண்டாவது முறையாகும்.

அங்கு அவருக்கு அந்நாட்டு அரசின் உயரிய மரியாதையுடன் கூடிய உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்த இந்தியர்கள் பெரும் கரகோஷத்துடன் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங், மன்னர் ஜிக்மி கேஷஷர் நம்கியால் வாங்சக் ஆகியோரை சந்தித்து பேசவுள்ளார். அப்போது, இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 

குறிப்பாக பொருளாதாரம் மற்றும் மேம்பாடு,  நீர்மின் உற்பத்தி துறைகளில் ஒருங்கிணைப்புடன் செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. மேலும், மண்டல ரீதியிலான முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள், இதர விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அண்டை நாடுகளின் உறவுகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் கடந்த 2014-இல் முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி பூடானுக்குத் தான் தனது முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டார். அப்போதிலிருந்தே இந்தியா மற்றும் பூடானுக்கு இடையிலான இருரதப்பு உறவு சிறந்த முறையில் முன்னேற்றம் கண்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.