எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அமெரிக்காவில் உள்ள வங்கியில் பயங்கர துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி

அமெரிக்காவில் உள்ள வங்கியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் சம்பவ இடங்களிலேயே உயிரிழந்தனர். 

News image
Updated On :24 ஜனவரி 2019, 5:12 am

DIN


மியாமி: அமெரிக்காவில் உள்ள வங்கியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் சம்பவ இடங்களிலேயே உயிரிழந்தனர். 

தென் அமெரிக்காவின் புளோரிடாவில் செப்ரிங் என்ற நகரில் செயல்பட்டு வரும் வங்கி ஒன்றிற்குள் புகுந்த இளைஞர்(21) ஒருவர், திடீரென தன்னிடம் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்து, வங்கிக்குள் நின்றுகொண்டிருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டான். இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் அந்த இளைஞனை சரணடையுமாறு கூறினர். அந்த இளைஞன் மறுக்கவே, அதிரடியாக வங்கிக்குள் நுழைந்த போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட இளைஞரின் பெயர் ஜேபின் சேவியர் என்றும், அவரிடம் கொலைக்கு எதுவும் பிண்ணனி காரணம் இருக்கிறதா? என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அமெரிக்காவில், துப்பாக்கி வன்முறைகள் ஒவ்வொரு ஆண்டும் பெருகி வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு மட்டும் துப்பாக்கி வன்முறையால் 40 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.