விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அமெரிக்காவில் கட்டிடத்தின் மீது  விமானம் மோதி தீப்பிடித்து விபத்து: 10 பேர் பலி

அமெரிக்காவில் கட்டிடத்தின் மீது விமானம் ஒன்று மோதி தீப்பிடித்து எரிந்ததில் 10 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

News image
Updated On :1 ஜூலை 2019, 4:13 pm

DIN

நியூயார்க்: அமெரிக்காவில் கட்டிடத்தின் மீது விமானம் ஒன்று மோதி தீப்பிடித்து எரிந்ததில் 10 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் இருந்து புளோரிடாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று திங்களன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் 8 பயணிகள் மற்றும் 2 விமானிகள் என மொத்தம் 10 பேர் இருந்தனர்.

ஓடுபாதையில் இருந்து விமானம் கிளம்பி மேல் நோக்கி எழும்ப முற்பட்ட போது திடீரென அதன் என்ஜின் பழுதானது. இதன் காரணமாக விமானமானது தரையில் இருந்து 200 அடி உயரத்துக்கு மேல் பறக்க முடியாமல் திணறியது.

கடும் சிரமத்திற்கு இடையில் விமானிகள் அந்த விமானத்தை பத்திரமாக தரையிறக்க முற்பட்ட போது விமானம் கட்டுப்பாட்டை இழந்தது. உடனே அருகிலுள்ள கட்டிடத்தின் மீது மோதியது. இதில் விமானம் வெடித்து தீப்பிடித்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 10 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர்.

இந்த கோர விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.