அமெரிக்க ட்ரோன் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்: தீவிரமாகும் பதற்றம்! 

ட்ரோன் என்று அழைக்கப்படும்  அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் செய்தி நிறுவனத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
அமெரிக்க ட்ரோன் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்: தீவிரமாகும் பதற்றம்! 

டெஹ்ரான்: ட்ரோன் என்று அழைக்கப்படும்  அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் செய்தி நிறுவனத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்க இடையேயான அணு சக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா  முறித்துக் கொண்டது. அதன்பிறகு  அமெரிக்கா மற்றும் ஈரானுன் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. அதேசமயம் ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்காவும்  விதித்துள்ளது.

சமீபத்தில் ஓமன் வளைகுடாவில் தனது எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரானே காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது .

இந்நிலையில் ட்ரோன் என்று அழைக்கப்படும்  அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் செய்தி நிறுவனத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஹோர்மஸ்கான் என்ற பிராந்திய வான் எல்லைக்குள்  அத்து மீறி நுழைந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் (ட்ரோன்) சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த தகவ ல் குறித்து உடனடியாக பதில் எதுவும் கூற முடியாது என்று அமெரிக்க ராணுவம் மறுத்து விட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com