நைஜீரியா விமான நிலையத்தில் டேங்கர் லாரி வெடித்து விபத்து: 55 பேர் பலி
நைஜீரியா விமான நிலையத்தில் டேங்கர் லாரி வெடித்து சிதறி விபத்தில் சிக்கி 55 பேர் பலியாகியுள்ளனர்.


அபுஜா: நைஜீரியா விமான நிலையத்தில் டேங்கர் லாரி வெடித்து சிதறி விபத்தில் சிக்கி 55 பேர் பலியாகியுள்ளனர்.
நைஜீரியாவின் நியாமி நகரில் அந்நாட்டின் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இதன் அருகே டேங்கர் லாரியொன்று வெடித்து சிதறிய விபத்தில் 55 பேர் பலியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பாக பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி விபத்தில் சிக்கி கவிழ்ந்துள்ளதாகவும், அப்போது பொதுமக்கள் பெட்ரோலை சேகரிக்க அங்கே சென்ற சமயம் வெடிவிபத்து நேரிட்டது என்றும் நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 55 பேர் உயிரிழந்தனர் என்றும், 36 பேர் காயம் அடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...