கலிஃபோர்னியா மருத்துவமனை நேற்று கோலாகலக் கொண்டாட்டத்துக்கு இணையாக கலகலப்பாகக் காணப்பட்டது.
காரணம் பிறந்து 5 மாதங்கள் ஆன குழந்தை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவதைக் கொண்டாடத்தான் மருத்துவமனை ஊழியர்கள் தயாராகி வந்தனர். குழந்தையின் தலையில் பட்டதாரிகளுக்கான தொப்பியை அணிவித்து உலகின் மிகச் சிறிய குழந்தை என்று பட்டம் சூட்டப்பட்ட அந்த குழந்தை மகிழ்ச்சியோடு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த குழந்தைக்கு மருத்துவமனை ஊழியர்கள் வைத்த பெயர் சேபீ (Saybie). இந்த குழந்தை கருவில் உருவாகி 23வது வாரத்திலேயே சிசேரியன் மூலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தாயின் கருவறையில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.
பிறக்கும் போது வெறும் 245 கிராம் மட்டுமே இருந்தது. ஒரு பெரிய சைஸ் ஆப்பிளின் எடைதான் அது. உயிர் பிழைக்கவே வாய்ப்பில்லை என்ற நிலையில்தான் சேபீக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 5 மாதங்கள் கடந்துவிட்டன. தற்போது 2.2 கிலோ எடையுடன் ஆரேரக்கியமான குழந்தையாக மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறது சேபீ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
ராகவ் சத்தாவுக்கு 60 எம்எல்ஏ-க்கள் ஆதரவா? பரபரப்பில் பஞ்சாப் அரசியல் களம்!

சொல்லப் போனால்... பெட்டிக்குள் உறங்கும் பூதம்!
டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


