ஹம்பர்க்: இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் படைகள் பயன்படுத்திய பதுங்கு குழி ஒன்று தற்போது சொகுசு ஹோட்டலாக மாற்றப்படவுள்ளது.
ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க்கின் செயின்ட் பாலி மாவட்டத்தில் உள்ள ஹோச்பங்கர் (Hochbunker) என்ற இடத்தை பதுங்கு குழியாக நாஜி படையினர் பயன்படுத்தி வந்தனர்.
கடந்த 1942ம் ஆண்டு 300 நாட்களில் கட்டப்பட்ட இந்த பிரமாண்டமான பதுங்கு குழி நாஜிக்கள் தோற்கடிக்கப்பட்ட 3 ஆண்டுகளுக்கு பின்னரே கண்டுபிடிக்கப்பட்டது.
ஃப்ளாக்டர்ம்-4 (Flakturm IV) என்று பெயரிடப்பட்ட இந்த பதுங்குகுழி அதன் பின்னர் தொலைக்காட்சி நிலையம், பிற வணிக வளாகமாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் என் ஹெச் ஹோட்டல் என்ற குழுமம் இந்த இடத்தை வாங்கி அங்கு மிகவும் ஆடம்பரமான ஹோட்டலைக் கட்டி வருகிறது.
136 அறைகள் கொண்ட இந்த ஹோட்டலில் தங்குவதற்கு ஒரு இரவுக்கு 100 யூரோக்கள் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொங்கும் தோட்டம், 5 பிரமிட் வடிவ கட்டிடங்கள் இங்கு வரவுள்ளதாம்.
இந்த ஹோட்டல் 2021ம் ஆண்டு திறக்கப்பட உள்ளதாக நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் நாளில் கிராம மக்கள் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

இன்றைய ராசி பலன்கள் (24 ஏப்ரல் 2026) மேஷம் - மீனம்! பொறுப்புகள் கூடும் இந்த ராசிக்கு!

அக்னிப் பசி!

ஆடுகளுக்கு இலை பறிக்கச் சென்ற விவசாயி சோலாா் மின்சாரம் பாய்ந்து பலி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


