கணபதி பப்பா மோரியா! உலகெங்கும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா!

பிள்ளையார் என்றால் போதும் உருகாதவர்கள் இருக்க முடியாது.
கணபதி பப்பா மோரியா! உலகெங்கும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா!
Published on
Updated on
1 min read

பிள்ளையார் என்றால் போதும் உருகாதவர்கள் இருக்க முடியாது. குழந்தைகளை முதன் முதலில் மிகவும் ஈர்க்கும் கடவுள் அவராகத்தான் இருப்பார். பிள்ளையாரிடம் நம் வேண்டுதல்களை சமர்ப்பிக்க, கடுமையான விரதம் இருக்க வேண்டும் என்று அவசியவில்லை, உளம் உருக வேண்டி நின்றால் போதும், வினை தீர்ப்பான் விநாயகப் பெருமான். மற்ற கடவுளர் போல அதிகம் சோதிக்கும் குணமும் கணநாதனுக்கு இருந்ததில்லை. நம்முடன் எப்போதும் வழித்துணையாக வலம் வருவார். பிறவித் தளைகளை நீக்கி பரம்பொருளிடம் நமைச் சேர்க்க பாலமாய் விளங்குவான் பால விநாயகன். சித்தம் கலங்கி நின்ற போழ்தில், சீராகச் சிந்திக்க வைக்க வல்லவன் சித்தி விநாயகர். நம் குறைகளை நீக்கி, பாவங்களை போக்கி வாழ்க்கையை எதிர்நோக்க மனத் துணைவைத் தருவார் வல்லப விநாயகர். இப்படி பிள்ளையாரின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம். முடிவற்ற முதல் பொருள் அவர். ஊனக் கண்களை நீக்கி ஞானக் கண்களைத் திறக்க வல்ல ஞான விநாயகரை இந்நாளில் போற்றி வணங்கி எல்லா வளமும் பெறுவோம். 

இந்த அழகிய நாளில் உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் விநாயகர் சதுர்த்தியை விமர்சையாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். பிரபலங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தனர். சமூக வலைத்தளத்தில் பதிவாகியிருந்த சில சுவாரஸ்யமான விநாயகர் சதுர்த்திப் பதிவுகள் இவை

**

**

**

**

**

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com