3 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது சீனா
சீனாவில் உருவாக்கப்பட்ட 3 செயற்கைக்கோள்களை அந்த நாட்டின் லாங் மார்ச்-4பி ராக்கெட் வியாழக்கிழமை விண்ணில் செலுத்தியது.


சீனாவில் உருவாக்கப்பட்ட 3 செயற்கைக்கோள்களை அந்த நாட்டின் லாங் மார்ச்-4பி ராக்கெட் வியாழக்கிழமை விண்ணில் செலுத்தியது.
இதுகுறித்து சீன அரசுச் செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்துள்ளதாவது:
ஷாங்க்ஸி மாகாணத்திலுள்ள தையுவான் ஏவுதளத்திலிருந்து 3 செயற்கைக்கோள்களுடன் லாங் மார்ச்-4பி ராக்கெட் வியாழக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.
அந்த 3 செயற்கைக்கோள்களில் ஒன்றான இஸட்ஒய்-1 02டி, சீன விண்வெளி தொழில்நுட்ப நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும். பிற செயற்கைக்கோள்களுடன் தகவல் இணைப்பை ஏற்படுத்தி, பூமியிலுள்ள வள
ஆதாரங்களைக் குறித்த துல்லியமான தகவல்களை இஸட்ஒய்-1 02டி செயற்கைக்கோள் பெற்றுத் தரும்.
பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நகர்ப்புற கட்டமைப்பு, போக்குவரத்து ஆகிய துறைகளுக்குத் தேவையான பல்வேறு தகவல்களைப் பெறுவதற்கு இந்த செயற்கைக்கோள் உதவிகரமாக இருக்கும்.
அதனுடன் மேலும் இரு சிறியவகை செயற்கைக்கோள்களை லாங் மார்ச்-4பி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது என்று ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...