அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

பிரான்ஸில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்தது

உலக நாடுகளில் கரோனா பாதித்து பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்த 4வது நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது.

News image
Updated On :21 ஏப்ரல் 2020, 5:50 am

உலக நாடுகளில் கரோனா பாதித்து பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்த 4வது நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது.

ஏற்கனவே அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் கரோன பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துவிட்ட நிலையில் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தொட்ட 4வது நாடானது பிரான்ஸ்.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி பிரான்ஸில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 55 ஆயிரமாகவும், பலி எண்ணிக்கை 20,265 ஆகவும் உள்ளது.

இதுவரை அந்த நாட்டில் கரோனா பாதித்து 37 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 42 ஆயிரமாக உள்ளது. அங்கு கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 8 லட்சத்தை எட்டுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.