சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை  60 ஆயிரத்தை நெருங்குகிறது

அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

News image
Updated On :29 ஏப்ரல் 2020, 5:11 am

DIN

அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக அந்த நாட்டுச் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

சீனாவின் ஹூஹானில் பரவத் தொடங்கிய கரோனா உலகம் முழுவதும் 210 நாடுகளுக்குப் பரவி மக்களை உலுக்கி எடுத்து வருகிறது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை லட்சக்கணக்கில் உயர்ந்து வருகின்றது. 

புதன்கிழமை காலை நிலவரப்படி அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59,266 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 2,500 பேர் பலியாகியுள்ளனர். 

தினமும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருவதால் அமெரிக்க மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். மொத்தம் அந்த நாட்டில் 1,035,765 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் 1,42,238 பேர் குணமடைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.