கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

அலாஸ்காவில் நடுவானில் இரு விமானங்கள் மோதல்: 7 பேர் பலி

அமெரிக்காவின் அலாஸ்காவில் இரண்டு சிறிய விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். 

News image

Seven dead after collision of two planes in Alaska

Updated On :1 ஆகஸ்ட் 2020, 7:03 am

அமெரிக்காவின் அலாஸ்காவில் இரண்டு சிறிய விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். 

அலாஸ்காவின் சால்டோட்டனா விமான நிலையம் அருகே நடுவானில் இரு விமானங்கள் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், அலாஸ்கா மாகாண சட்டமன்ற உறுப்பினர் கேரி நாப் உயிரிழந்தார்.  

மேலும், அந்த விமானத்தை அவரே தனியாக ஒட்டி வந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றொரு விமானத்தில் 4 சுற்றுலாப்பயணிகள், ஒரு வழிகாட்டி, விமானி உள்பட மொத்தம் 7  பேர் பலியாகியுள்ளனர். 

இந்த விமான விபத்து தொடர்பாகத் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.