திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

சிங்கப்பூரில் அழிக்கப்பட்ட 8 டன் கடத்தல் யானைத் தந்தங்கள்

பல்வேறு நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்குக் கடத்தி வரப்பட்ட 8 டன் யானைத் தந்தங்களை சிங்கப்பூர் அரசாங்கம் அழித்தது.

News image

சிங்கப்பூரில் அழிக்கப்பட்ட 8 டன் கடத்தல் யானைத் தந்தங்கள்

Updated On :12 ஆகஸ்ட் 2020, 10:55 am

DIN

பல்வேறு நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்குக் கடத்தி வரப்பட்ட 8 டன் யானைத் தந்தங்களை சிங்கப்பூர் அரசாங்கம் அழித்தது.

உலகின் பல நாடுகளிலும் அலங்கார பொருள்கள் செய்யவும், ராசிக்காகவும் யானைகளின் தந்தங்கள் வேட்டையாடப்படுகின்றன. சீனா மற்றும் வியட்நாம் பகுதிகளில் செய்யப்படும் ஆபரணங்களுக்காக ஆசிய மற்றும் ஆப்பிரிக்க யானைகளின் தந்தங்கள் அதிகளவு வேட்டையாடப்படுகின்றன. இதனால் யானைகளின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க வகையில் குறைகின்றன. காடு உருவாக்கத்தில் முக்கிய விலங்காக உள்ள யானைகளின் இறப்பால் பல்லுயிர்கள் பாதிக்கப்படுகின்றன.

இந்நிலையில் பல்வேறு நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.3 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான 8 டன் யானைத் தந்தங்களை சிங்கப்பூர் அரசாங்கம் அழித்துள்ளது.

"சட்டவிரோத வர்த்தகம் காரணமாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் யானைகளின் வாழ்க்கை நெருக்கடி நிலையில் உள்ளது." என்று நேச்சர் சிங்கப்பூருக்கான உலகளாவிய நிதியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.ரகுநாதன் கூறினார்.

தந்தத்திற்காக வேட்டைக்காரர்களால் ஒவ்வொரு நாளும் 100 ஆப்பிரிக்க யானைகள் கொல்லப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன்படி ஆப்பிரிக்காவில் 4 லட்சம் யானைகள் மட்டுமே உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.