சீனாவில் உயர் வேக இருப்புப்பாதை வளர்ச்சித் திட்டம்
சீனத் தேசிய இருப்புப்பாதை குழுமம், சீன இருப்புப்பாதை வளர்ச்சி பற்றிய திட்டம் ஒன்றை அண்மையில் வெளியிட்டது.


சீனத் தேசிய இருப்புப்பாதை குழுமம், சீன இருப்புப்பாதை வளர்ச்சி பற்றிய திட்டம் ஒன்றை அண்மையில் வெளியிட்டது.
இத்திட்டத்தின்படி, 2035ஆம் ஆண்டில் சீனாவில் இருப்புப்பாதையின் மொத்த நீளம், 2 இலட்சம் கிலோமீட்டரை எட்டும். இதில் உயர் வேக இருப்புப்பாதையின் நீளம் சுமார் 70 ஆயிரம் கிலோமீட்டரை எட்டும். சீனாவில் 5 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையுடைய நகரங்கள் உயர் வேக இருப்புப்பாதை வலைப்பின்னலில் சேர்க்கப்படும்.
2050ஆம் ஆண்டில் மேலும் முன்னேறிய நவீன இருப்புப்பாதை வல்லரசின் ஆக்கப்பணிக்கான இலக்கை சீனா பன்முகங்களிலும் நனவாக்கும்.
தொடர்புடைய புள்ளி விபரங்களின்படி, இவ்வாண்டின் ஜூலைத் திங்கள் இறுதி வரை, சீனாவில் போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ள இருப்புப்பாதையின் மொத்த நீளம் சுமார் ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 400 கிலோமீட்டர் ஆகும்.
இது, உலகளவில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது. போக்குவரத்துக்கு திறந்து வைக்கப்பட்டுள்ள உயர் வேக இருப்புப்பாதையின் நீளம், 36 ஆயிரம் கிலோமீட்டர் ஆகும். இது உலகளவில் முதலிடத்தை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்:சீன ஊடக குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...