புதிய கட்டத்தில் சீனாவின் வளர்ச்சி
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனா வளர்ச்சியின் புதிய கட்டத்தில் அடி எடுத்து வைத்துள்ளது.


“உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனா வளர்ச்சியின் புதிய கட்டத்தில் அடி எடுத்து வைத்துள்ளது.” அடுத்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சித் திட்டங்களை ஆராய்ந்தபோது அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இவ்வாறு குறிப்பிட்டார்.
சீனாவில் 1953ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டு அதன்படி செயல்திட்டங்களை அரசு அமல்படுத்தி வருகின்றது. 14ஆவது ஐந்தாண்டுத் திட்டம் 2021 முதல் 2025 வரையிலானது. இது, சீனாவுக்கு மிக முக்கியம் எனக் கருதப்படுகிறது. சீனா புதிய வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கிய பிறகு வரும் முதலாவது ஐந்தாண்டுத் திட்டம் இதுவாகும். நவீன சோஷியலிஸ நாடாக சீனாவை மாற்றவும், இரு நூற்றாண்டு இலக்கை நனவாக்கவும் இப்புதிய ஐந்தாண்டு திட்டம் துருப்புச் சீட்டாக இருக்கும்.
சீன அரசு நிர்வாகத்தின் மிக முக்கிய சிறப்பம்சமாகக் கருதப்படுவது அதன் ஐந்தாண்டுத் திட்டங்கள்தான். வளர்ச்சித் திட்டங்களை நிர்ணயிப்பதற்கும், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக் கொள்கைகளை வகுத்து காலத்துக்கு ஏற்ப முன்னேறிச் செல்வதற்கான வியூகங்களை வகுப்பதற்கும் ஐந்தாண்டுத் திட்டங்கள் ஆணி வேராக இருந்து வருகின்றன. சீனாவில் 14ஆவது ஐந்தாண்டுத் திட்டம் என்பது வெறும் அடுத்த 5 ஆண்டுகளை மட்டும் கருதி அமைக்கப்படுவது அல்ல, அது, 2035 என்ற தொலைநோக்கு இலக்கை நோக்கி நகர்ந்து செல்வதற்கான ஒரு பெருந்திட்டமாகும்.
“கிடைத்த அனுபவங்களின்படி, மூலவளங்களைச் சரியாகப் பங்கீடு செய்து சந்தையைச் சரியாக இயங்க வைக்க நடுத்தர நோக்கு மற்றும் தொலை நோக்குத் திட்டங்கள் வழிவகுக்கும். அதேவேளை அரசும் தனது பங்கினை மேலும் சிறப்பாகச் செய்ய முடியும்,” என்று ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வியூகத்தில் உள்ள உண்மைகளை மறுக்க முடியாது. கொவைட்-19 நோய் காலக்கட்டத்தில் வரவிருக்கும் இப்புதிய 5 ஆண்டுத் திட்டம் நாட்டின் வளர்ச்சிக்கும், உலக வளர்ச்சிக்கான ஆதரவுக்கும் பெரும் பங்காற்றும். அதேசமயம், புற உலகில் ஏற்பட்டு வரும் மிக மோசமான சூழல்கள் மற்றும் தனது சாதகமான அம்சங்கள் ஆகியவற்றைச் தெளிவுற அறிந்து அதற்கேற்ப தனது வியூகங்களைச் சீனா அமைக்க வேண்டும் என்று ஒட்டுமொத்தப் பொருளாதார ஆய்வுக் கழகத்தின் தலைவர் வங் சங்லின் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனைத் தவிர, இக்கட்டான இக்காலக்கட்டத்தில் திறப்புசார் பொருளாதாரக் கொள்கைகளைச் சீனா கடைப்பிடித்து வருவது அதன் புதிய கால வளர்ச்சியை உறுதி செய்யும். இது மேலும் விரிவாக்கப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது. இக்கொள்கைகளால் சீனாவுக்குப் பயன் கிடைப்பதுடன் பிற நாடுகளும் விரிவான வாய்ப்புகளைக் கிடைக்கப் பெறும். கரோனாவுக்குப் பிந்தைய காலம் சீனா உள்பட அனைத்து நாடுகளுக்கும் முக்கியமானது. இக்காலக்கட்டதில், சீனாவின் தொடர் வளர்ச்சியை 14ஆவது ஐந்தாண்டுத் திட்ட இலக்குகளின் நனவாக்கும் உறுதி செய்திடும்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...