விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

பதவியை ராஜிநாமா செய்தார் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே

ஜப்பானின் நீண்ட கால பிரதமர் என்ற பெருமைக்குரிய ஷின்ஸோ அபே, தனது உடல்நிலை காரணமாக பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

News image

ஜப்பான் பிரதமர் சின்சோ அபே 

Updated On :28 ஆகஸ்ட் 2020, 9:58 am

PTI

டோக்யோ: ஜப்பானின் நீண்ட காலம் பிரதமர் பதவியை வகித்தவர் என்ற பெருமைக்குரிய ஷின்ஸோ அபே, தனது உடல்நிலை காரணமாக பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

தனது பல்வேறு இலட்சியங்களை நிறைவேற்றாமலேயே பதவியில் இருந்து விலகுவது, பெரும் துயரத்தை ஏற்படுத்துவதாகவும் ஷின்ஸோ அபே குறிப்பிட்டுள்ளார்.

அல்சர் பிரச்னையால் அவர் இளம் வயது முதலே அவதிப்பட்டு வந்ததாகவும், சிகிச்சையின் பலனாக அதிலிருந்து ஓரளவுக்கு குணமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த கோடைக்காலத்தின் போது ஷின்ஸோ அபேவின் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதாகவும், இந்த மாதத்தில் அது மோசமடைந்தது, மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

தற்போது அவருக்கு புதிய சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அதில் அவருக்கு நான்கு ஊசிகள் செலுத்தப்பட உள்ளது. ஒரு வேளை அவருக்கு உடல்நிலை சீரடையலாம், ஆனால், அதை உறுதியாகச் சொல்ல முடியாது, எனவேதான் அவர் தனது பதவியில் இருந்து விலகுவது என்று முடிவு செய்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.