/

உலக அளவில் கரோனா பாதிப்பு 2.51 கோடியைத் தாண்டியது!

உலக அளவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2.51 கோடியைத் தாண்டியுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 5:13 pm

DIN

உலக அளவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2.51 கோடியைத் தாண்டியுள்ளது. 

உலகில் பெரும்பாலான நாடுகளில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, உலக அளவில் மொத்த கரோனா பாதிப்பு 2.51 கோடியாக அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி 2,51,63,150 பேர் கரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 8,46,734 ஆக உள்ளது.

அதேநேரத்தில் கரோனா பாதித்தோரில் 1,75,06,054 பேர் கரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். மேலும், உலகம் முழுவதும் தற்போது 68,10,362 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 61,370 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 

உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 61,39,078 பேரும், பிரேசிலில் 38,46,965 பேரும், இந்தியாவில் 35,39,712 பேரும், ரஷியாவில் 9,85,346 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்னர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.