/

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 60 லட்சத்தை நெருங்குகிறது!

அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60 லட்சத்தை நெருங்குகிறது. 

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 5:13 pm

DIN

அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60 லட்சத்தை நெருங்குகிறது. 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. இங்கு நாளுக்கு நாள் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோன்று தினமும் நூற்றுக்கணக்கில் உயிரிழப்பு ஏற்படுகிறது. 

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 59,48,426 ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,82,535 ஆக உள்ளது. அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 30 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

வோல்டோமீட்டர் அளவீட்டின்படி, அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,843 பேர் புதிதாக கரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மேலும் 954 பேர் உயிரிழந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.